முறிகண்டி பிள்ளையார் கோயிலை தன்னிடம் திருப்பி ஒப்படைக்கக் கோரி அதன் பரம்பரைவழி தர்மகர்த்தா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை, உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
மனுதாரர் ஜி.மணிவண்ணன் தனது மனுவில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் உட்பட 14 பேர்களை எதிர்மனுதாரர்களாக குறிப்பிட்டிருந்தார். மனுதாரர் சார்பில் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மோகன் பாலேந்திரா ஆகிய சட்டத்தரணிகள் ஆஜரானார்கள்.
முறிகண்டி பிள்ளையார் கோயில், ஏ-9 கண்டி வீதியில் அமைத்துள்ள புராதன இந்துக் கோயிலாகும். 1990ஆம் ஆண்டு, இந்தக் கோயிலை விடுதலைப்புலிகள் தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.
விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர், அதன் பரிபாலனத்தை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’