வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 26 ஜூலை, 2010

மிருகங்கள் உடலில் தயாரிக்கப்பட்ட “பீர்” இங்கிலாந்தில் அமோக விற்பனை

மதுபான வகைகளில் ஒன்றான “பீர்” பார்லியில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவில் ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. எனவே இதை பெரும் பாலானோர் விரும்பி பருகுகின்றனர். தற்போது இறந்த விலங்குகளின் உடலில் இருந்து தயாரிக்கப்பட்ட கொடூரமான பீர் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது இறந்த கீரிகள், அணில்கள் மற்றும் முயல்களின் உடல் பாகங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 55 சதவீதம் ஆல்கஹால் கலங்கப்பட்டுள்ளது. இதை இங்கிலாந்தின் பிரபல மது கம்பெனி தயாரித்துள்ளது.
முதலில் 12 பாட்டில் பீர் மட்டும் தயாரிக்கப்பட்டது. இதன் விலை ஒரு பாட்டில் ரூ.3500 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விற்பனைக்காக வெளியிடப்பட்ட 4 மணி நேரத்தில் அனைத்து பாட்டில்களும் விற்று தீர்ந்து விட்டது.
55 சதவீதம் ஆல்கஹால் சேர்க்கப்பட்டுள்ளதால் அதில் போதை அதிகம் இருப்பதாகவும், அதை விரும்புவதாகவும், வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த பீர் பெருமளவில் தயாரிக்கப்பட உள்ளது. ஆனால் இதற்கு மிருக நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வகை பீர்பாட்டில்கள் தயாரிப்பது மூர்க்க தனமானது. மற்றும் முட்டாள் தனமானது என்று கருத்து தெரிவித்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’