வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 25 ஜூலை, 2010

தென்னாபிரிக்காவில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க ஏற்பாடு

தென்னாபிரிக்க செல்ஷியஸ் தீவில் சிக்குண்டுள்ள இலங்கை மீனவர்களுக்கு உரிய உதவிகளை வழங்கி அவர்கள் இலங்கை திரும் புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கரிட்டாஸ் இலங்கை செடெக் நிறுவனம் அங்குள்ள தமது அமைப்பு மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என மேற்படி நிறுவனத்தின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மீன் பிடிப்பதற்கென கடலில் பயணித்துக் கொண்டிருந்த நால்வர் கொண்ட படகு திசைமாறி 29 நாட்கள் கடலில் தத்தளித்து செல்ஷியஸ் தீவுப் பகுதியைச் சேர்ந்த மீட்புக் குழுவினரால் கரை சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்காவின் "செல்ஷியஸ் தீவில்' அவதியுறும் இலங்கை மீனவர்களுக்குரிய மனிதாபிமான சட்ட உதவிகளை வழங்கி அவர்களை இலங்கை நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துதவுமாறு கரிட்டாஸ் இலங்கை செடெக் நிறுவனம், தென்னாபிரிக்கா கரிட்டாஸ் நிறுவனத்திற்கு தொலைநகல், தொலைபேசி மூலமாக அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.
தென்னாபிரிக்க செல்ஷியஸ் தீவிலிருந்து இம்மீனவர்களிடமிருந்து கரிட்டாஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பான ஊடகத்துறை ஆலோசகர் எஸ்.பி.அந்தோனிமுஷி விற்கு கிடைத்த தொலைபேசி தகவலை தொடர்ந்து, கரிட்டாஸ் நிறுவனத்தின் தேசிய இயக்குநர் அருட்தந்தை ஜோர்ஜ் சிகாமணி அடிகளாரின் பணிப்புரைகளின்பேரில் கரிட்டாஸ் தென்னாபிரிக்கா நிறுவனத்திற்கு கரிட்டாஸ் இலங்கை, இவ் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.
மீன்பிடித் துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுறுத்தலின்படி தென்னாபிரிக்கா செல்ஷியஸ் தீவிற்குச் சென்றுள்ள இம்மீன்பிடி படகின் உரிமையாளரான பேருவளையைச் சேர்ந்த எஸ். மனோஜ் தொலைபேசி மூலமாக எஸ். பி. அந்தோனிமுத்துவிற்கு கொடுத்த தகவலின்படி கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மீன்பிடி தொழிலிற்காக கடலுக்குச் சென்ற எஸ்.சரத் பெரேரா, எஸ்.செயஸ்டியஸ், எச்.ஹட்டிம், அ. சுரேஸ் ஆகிய நால்வரைக் கொண்ட படகு திசைமாறி மூன்று மாதங்களாக கடலில் அலைந்து திரிந்துள்ளது.
காலநிலையின் காரணமாக பழுதடைந்து 29 நாட்களாக கடலில் தத்தளித்த நிலையில் செல்ஷியன் தீவின் மீன் பிடி குழுவினரால் காப்பாற்ற இவர்கள் அங்குள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு சொந்தமான வீட்டில் தங்க வைக்கப்பட்டு இலங்கைக்கான தென்னாபிரிக்க ராஜதந்திரி வெபரின் ஒத்துழைப்புடன் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களது படகினை மீட்பதற்காக கோரப்படும் 35 இலட்சம் ரூபாவை கொடுக்க முடியாதுள்ளது.
மனோஜ் பல்வேறு அவதிகளுக்கு முகம் கொடுப்பதுடன் மானசீக ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர்களது விடயத்தில் மனித நேய ரீதியில் உதவுமாறு கரிட்டாஸ் தென் ஆபிரிக்கா, செலிஸ்பஸ் தீவு ஆயர் அதிவண.டெனிஸ் வெகி, இலங்கை ராஜதந்திரி வெபர் ஆகியோருடன் நேற்று சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அதேவேளை இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு உதவும் வகையில் தென்னாபிரிக்காவிலுள்ள "நெல்சன் மண் டேலா நிதியத்தின்' அதிகாரி ரிபுமோரன் சுடஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள எஸ். பி.அந்தோனிமுத்து நாளை திங்கட்கிழமை இலங்கையிலுள்ள தென்னாபிரிக்க தூதுவராலய உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் திங்களன்று மாலை மீன்பிடி துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, செயலாளர் பேராசிரியர் திருமதி சார்மிளõ டி சொய்சாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக கரிட்டாஸ் நிறுவனம் இலங்கை அரசு மற்றும் சர்வதேச ரீதியில் செயற்பட்டு தீர்வு கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’