வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 11 ஜூலை, 2010

யாழ். வேலணை வைத்தியசாலையில் குடும்பநல மாது சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வேலணை அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த குடும்பநல மாது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் அவரது விடுதியில் தூக்கிலிடப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கைதடியைச் சேர்ந்த சரவணை தர்ஷிகா (வயது 27) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டதையடுத்து மேற்படி வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’