இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. சபையின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவை தாம் வரவேற்பதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள அவர், "தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் அவரது அரசாங்கமும் இலங்கை தமிழர்களை ஏமாற்றியுள்ளன என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், உலக சமாதான பேரவையான ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலாளரும், அனைத்தையும் இழந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் வகையில் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கதக்கது" என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம், குறித்த நிபுணர்கள் குழுவுக்கு விசா அனுமதிப்பத்திரன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது தொடர்பாக அந்த அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கை அரசாங்கம் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களை நாட்டுக்குள் அனுமதிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’