வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 ஜூலை, 2010

பொது இடங்களில் குப்பை எறிந்த 6 பேர் பொலிஸாரால் கைது

பொது இடத்தில் குப்பை எறிந்த குற்றச்சாட்டில் 6 பேரை தெஹிவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



இந்நபர்கள் வாகனங்களில் வந்து, பொது இடங்களில் குப்பைகளை எறிந்ததாக பொலிஸாரர் தெரிவித்துள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சூழலை மாசுபடுத்தும் விதத்திலான இத்தகைய நடத்தையில் ஈடுபடுபவர்களைக் கையாள்வதற்காக பொலிஸ் திணைக்களம் விசேட பறக்கும் படையொன்றை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி இது தொடர்பாக கூறுகையில், இத்தகைய நபர்களைக் கைது செய்வதற்கு மாநகர சபைகள், நகரசபைகள் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றுக்கு பொலிஸார் உதவுவதாகத் தெரிவித்தார்.
"பொது இடங்களில் குப்பை வீசியமைக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட முதல் நபர்கள் இவர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இவ்வாறு குப்பை வீசி எறிந்தவர்கள் பலரை இதற்கு முன்னரும் நாம் கைது செய்துள்ளோம்" என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’