வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 ஜூலை, 2010

ஒரே பிரசவத்தில் 4குழந்தைகள்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன.
சித்தூர் மாவட்டம் பைரெட்டிப்பள்ளி அடுத்த சிலம்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமணாரெட்டியின் மகள் பவனிதாவுக்கும் பெங்களூரு அருகே டி.சி.பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணிக்கும் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த பவனிதாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது.
பெங்களூரு நகரில் உள்ள மகாவீர் ஜெயின் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. நான்கு குழந்தைகள் பிறந்தன. பிறந்த குழந்தைகளில் மூன்று ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என டாக்டர்கள் தெரிவித்தனர். நலமுடன் உள்ள தாயும், குழந்தைகளையும் பவனிதாவின் பெற்றோர் நேற்று முன் தினம் சொந்த கிராமமான சிலம்பள்ளிக்கு அழைத்து வந்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’