வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஜூலை, 2010

சுமார் 200 இலங்கை அகதிகளுடன் செல்லும் கப்பல் குவாட்டமாலாவில்

இலங்கையிலிருந்து அகதிகளாகப் புறப்பட்டவர்களை ஏற்றிச் செல்லும் கப்பல் தற்போது குவாட்டமாலா அருகில் சென்றுகொண்டிருப்பதாக ஏஷியன் ட்ரிபூன் தெரிவித்துள்ளது.

59 மீற்றர் நீளமான எம்.வி கடற்சூரியன் என்ற பெயருடைய இக்கப்பலே குவாட்டமாலா அருகில் சென்று கொண்டிருக்கிறது. இக்கப்பலில் 219 இலங்கை அகதிகளும், 12 இந்தியத் தமிழர்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கப்பல் ஆரம்பத்தில் தனது பயணத்தை அவுஸ்திரேலியா நோக்கி ஆரம்பித்திருந்த போதும், பின்னர் கனடா, பிரிட்டிஷ் கொலம்பியாவை நோக்கிச் செல்வதாக கனடா அதிகாரிகள் தெரிவிததுள்ளனர்.
இக்கப்பலில் விடுதலைப் புலிகளின் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என இலங்கை அரசு கனேடியன் அரசுக்கு எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு 75 இலங்கை அகதிகளுடன் கனடாவைச் சென்றடைந்த கப்பலிலும் புலி உறுப்பினர்கள் இருப்பதாக இலங்கை கூறியதை அடுத்து அந்த 75 பேரும் கனடா சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’