இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் தற்காலிகமாக வாபஸ் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை தற்காலிகமாக நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த நிபந்தனைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பதிலளிக்கத் தவறியதையடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் இன்று தெரிவித்துள்ளது.உலகளாவிய ரீதியிலான மனித உரிமைகள் நிகழ்ச்சிநிரலுக்கு இணங்கவும் நல்ல நம்பிக்கையுடனும் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்தமை குறித்து நாம் மிகவும் கவலையடைகிறோம். எவ்வாறெனினும் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசாங்கம் வருவதற்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி கதரின் அஸ்டன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் அமைச்சர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானித்தின்படி ஐரோப்பிய சந்தையில் இலங்கை தனது முன்னுரிமைச் சலுகையை ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இழக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’