கா மன்வெல்த் போட்டிகளுக்கு, ரூ.100 கோடி நிதியை அன்பளிப்பாக அளிக்க, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மறுத்துவிட்டது.
டெல்லியில் வரும் அக்டோபரில் தொடங்கவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பிசிசிஐ-யிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, மும்பையில் இன்று ஆலோசனை நடத்திய பிசிசிஐ செயற்குழு, காமன்வெல்த் போட்டிகளுக்கு நிதியுதவி அளிப்பதில்லை என்று முடிவெடுத்தது.
இதுகுறித்து பிசிசிஐ செயலர் என்.ஸ்ரீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், "காமன்வெல்த் போட்டிகளுக்காக ரூ.100 கோடியை நிதியுதவியாக அளிக்கும் நிலையில் இல்லை," என்று கூறியுள்ளார்.
இதனிடையே, கட்டமைப்புப் பணிகளில் தாமதம், நிதி முறைகேடுகள் என காமன்வெல்த் போட்டிகளுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்குரியது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’