யாழ். பூநகரிக்கும் குருநகருக்கும் இடையிலான படகுச் சேவை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நான்கு படகுகளைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
இவ்விரு நகரங்களுக்கும் இடையில் தரைமார்க்கமாகச் செல்லும் நேரத்தை விட, படகில் செல்வது நேரத்தை மீதப்படுத்துமென பயணிகள் சிலர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பூநகரி இறங்குதுறையை கடந்தவாரம் பார்வையிட்டதுடன் படகுச் சேவையை ஆரம்பிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’