உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபஸ உள்ளிட்ட குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழக எ.பி.க்கள் குழுவும் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.நேற்று மாலை புதுடில்லி சென்றடைந்த ஜனாதிபதி தலைமையிலான குழுவினரை இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி.பிரணித் கெளர் மற்றும் புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகளும் சென்று வரவேற்றனர். ஜனாதிபதியுடன் அவரின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஸ, அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல்ல, டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சசின் வாஸ் குணவர்தன ஆகியோரும் சென்றனர்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபஸ சந்திக்கவுள்ளார். அத்துடன் இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்கவுள்ள தமிழக எம்.பி.க்கள் குழு, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நாளை வியாழக்கிழமை ஜனாதிபதி சிம்லா செல்லவுள்ளார். அத்துடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நாடு திரும்பும் ஜனாதிபதி மஹிந்த ராஜபஸ, இந்திய அரசாங்கத்துடன் ஐந்து ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் பயங்கரவாத ஒழிப்பு, கலாசார பரிமாற்றம், இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய உதவி உட்பட 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடவுள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’