இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட மாட்டாது என ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஷி தெரிவித்தார்.
கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.
ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கை அரசாங்கத்திற்கான அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் எனவும் யசூஷி அகாஷி குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூனுக்கு ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழு அமைக்கும் செயற்பாடு இடம்பெற்று வரும் அதேவேளை, இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக் குழுவை அமைத்திருப்பதாகவும் யசூஷி அகாஷி தெரிவித்தார்.
அத்துடன், யுத்தத்தின் பின்னரான இலங்கையின் முன்னேற்றகரமான நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த யசூஷி அகாஷி, நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
யசூஷி அகாஷி 20ஆவது தடவையாக விஜயத்தை மேற்கொண்டு கடந்த 15ஆம் திகதி இலங்கை வந்திருந்தார்.
-
1 கருத்துகள்:
அட பன்றிக்குப் பிறந்தவனே, உன் உடல் வேட்கைகளை அங்கு சென்று தீர்த்துவிட்டு போய்க் கொண்டிரு. எதற்காக தமிழரின் வேதனையை மேலும் அதிகப்படுத்துகிறாய். நிதி உதவி என்று அள்ளிக் கொடுத்து எம்மை அழித்ததில் பெரும பங்கு உனக்கும உன் நாட்டுக்கும் உண்டென்பது யாவரும் அறிந்ததே. யாழ்
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’