தனுன திலக்கரட்னவின் 7 வங்கி கணக்குகளை அரசுடமையாக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஹைகோப் நிதி மோசடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேக்காவின் மருமகன் தொடர்பில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள தனுன திலக்கரட்னவை இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னர் உத்தரவிடப்பட்டிருந்தது. இன்றும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள பணத்தை நீதியமைச்சின் விருப்பத்தின்படி பயன்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தனுன திலக்கரட்னவின் வங்கி கணக்கில் ஒரு கோடிய 50 லட்சத்து 74 ஆயிரத்து 910 ரூபாவும் ஆயிரத்து 251 அமெரிக்க டொலர்களும் (ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 194 ரூபா) வைப்பிலிடப்பட்டிருந்தன. தனுன திலக்கரட்ன இலங்கையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஏற்கவே காவற்துறையினர் தெரிவித்திருந்தனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’