சிறிலங்காவில் கடந்த வருடம் நடந்த முடிந்த இறுதிக்கட்ட யுத்தத்தில், வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள், அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, சண்டே லீடர் பத்திரிகைக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் பேட்டியளித்திருந்தார்.
இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையில், இப் பேட்டியின் குறிப்பேட்டினை நீதிமன்றத்தில் கையளிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் சண்டே லீடர் ஆசிரியருக்கு உத்திரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவுக்கு அமைவாக குறித்த கையேடு சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ் அவர்களினால், நீதிமன்றில் இன்று கையளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு வரும், ஜுலை மாதம் 12ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு வருமெனவும், அன்றைய தினம் அசிரியர் நீதிமன்றில் ஆஜராக வெண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’