வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 ஜூன், 2010

நீச்சல் தடாகத்தில் சேலை உடுத்திக் கொண்டா குளிப்பார்கள்? பிரியாமணி ஆவேசம்

படப்பிடிப்பில் நீச்சல் தடாகத்தில் குளிக்கும் காட்சியில் நீச்சல் உடையைத்தான் அணிய வேண்டும். சேலை உடுத்திக் கொண்டா குளிப்பார்கள்...?, என்று ஆவேசமாகக் கேட்கிறார் நடிகை ப்ரியாமணி.
தேசிய விருது பெற்றிருந்தாலும், கடந்த ஒரு வருடமாக தமிழில் புதிய படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை, ப்ரியாமணிக்கு. ராவணன் படத்தில் மட்டும் சிறு வேடத்தில் தலைகாட்டி விட்டுப் போனார்.
இப்போது தமிழ் சினிமாவில் அவருக்குப் படங்களே இல்லை.
இந்நிலையில் பிரியாமணி அளித்த பேட்டி வருமாறு:
பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிட்டேன். அதற்காக தேசிய விருதும் கிடைத்தது. ஆனாலும் எனக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் வரவில்லை.
தமிழ் பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்ன நினைத்து இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று புரியவில்லை.
நான் நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளேன். ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வருவதில்லை.
மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. ராவணன் படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது.
மலையாளத்தில் வெளியான திரக்கதா படத்தில் எனக்கு விருது கிடைத்திருக்க வேண்டும். சொந்த குரலில் டப்பிங் பேசாததால் அந்த வாய்ப்பை இழந்தேன். தெலுங்கு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் டப்பிங் பேச முடியவில்லை.
எல்லா நடிகைகளுமே இப்போது கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் நான் பிகினி உடையில் நடித்து விட்டேன் என்று எல்லோரும் என்னைத்தான் விமர்சிக்கிறார்கள்.
தெலுங்கில் துரோணா படத்தில் ஒரு கனவு காட்சியில்தான் அப்படி நடித்து இருக்கிறேன். எனது உடல் அமைப்புக்கு கவர்ச்சி உடை அணிவது பொருத்தமாக இருக்கிறது.
இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில் நீச்சல் உடையைத்தான் அணிய வேண்டும். சேலை உடுத்திக் கொண்டா குளிப்பார்கள்...?"

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’