வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 ஜூன், 2010

புத்தளத்தில் சடலம் மீட்பு;தனிப்பட்ட விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

புத்தளம், முந்தல் கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்திய இளைஞர் ஒருவரின் சடலம் தொடர்பில் தனிப்பட்ட முறையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு கல்கிசை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொலிஸ்மா அதிபர் தலைமையிலான குற்றப் புலனாய்வுப் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று குறித்த இந்திய இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கல்கிசை நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் றுச்சிர தெரிவித்தார்.
புத்தளம், முந்தல் கடற்கரைப் பகுதியில் கப்ரக வாகனமொன்றில் குறித்த இந்திய இளைஞரின் சடலத்தை இரு நபர்கள் கொண்டு வந்து வீச முற்பட்டிருந்த வேளையில் இதனை அப்பகுதி மக்கள் அவதானித்திருந்தனர்.
இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்திற்கு அப்பகுதி மக்கள் அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதம அதிகாரியும் மற்றுமொரு நபரும் புத்தளம், முந்தல் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’