அரேபியன் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகக் கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்வதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்த நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மேற்கு வளிமண்டல அடுக்கில், சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த காற்றுடன கன மழை பெய்யும்.
காற்றுடன் கூடிய மழையின்போது இடியும், மின்னலும் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’