வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 ஜூன், 2010

சல்மான் கான் - அசினுக்கு இலங்கை அரசு அமோக வரவேற்பு : 'இசெட்' தர பாதுகாப்பு அளிப்பு

இலங்கையில் படபிடிப்பை நடத்த வந்துள்ள பொலிவூட் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை அசின் ஆகியோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் சிவப்பு கம்பள வரவேற்புக்கு ஒப்பான வரவேற்பை வழங்கியுள்ளது.

சல்மான் கானும் அசினும் “ரெடி” என்ற படத்தின் படபிடிப்பை ஆரம்பிக்க தயாராகியுள்ளனர்
இந்தநிலையில் அவர்களுக்கு இலங்கை அரசாங்கம் 'இசெட்' தர பாதுகாப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அவர்கள் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் படபிடிப்பை ஆரம்பிக்கவிருந்த போது, ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள் அவர்களுக்கான பாதுகாப்பை கண்காணித்தனர்
ஐஃபா விருது வழங்கல் நிகழ்வு கொழும்பில் நடைபெற்ற போது சல்மான் கானே முதன்மை விருந்தினராக பங்கேற்றிருந்தார்.
இதன் காரணமாக அவருக்கு இலங்கை அரசாங்கம் முழுமை வரவேற்பையும் பாதுகாப்பையும் வழங்கி வருகிறது.
இந்தநிலையில் ஐஃபா நிகழ்வு முடிவடைந்து இந்தியாவுக்கு திரும்பிய சல்மான் மொரிசியஸில் நடைபெறவிருந்த படபிடிப்பை ரத்து செய்து விட்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வலியுறுத்தலின் பேரில் உடனடியாக இலங்கையில் படபிடிப்பை நடத்த திட்டமிட்டார்
சல்மான் கானும் அசினும் இலங்கையில் கண்டி மற்றும் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் தமது படபிடிப்பை நடத்தவுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’