வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 ஜூன், 2010

ஈழத்தமிழ் அகதிகள் விவகார கடும்போக்கு கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படும்: ஆஸி,யின் புதிய பிரதமர்

ஈழத் தமிழ் அகதிகளுக்கு புகலிடம் வழங்கும் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் கடும்போக்கு கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் என தெரியவருகிறது. புதிய பிரதமராக நேற்று பதவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட் இக் கடும்போக்கை தளர்த்துவார் என்று ஆஸியில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈழத்தமிழ் அகதிகள் ஏராளமானோர் வருடாவருடம் கடல்வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வருகின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் அகதி அந்தஸ்து பெற அருகதை உடையவர்கள் ஆவர்.
ஆனால் அவுஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட்டிற்கு முன் பிரதமராக இருந்த கெவின் ரூட் தலைமையிலான அரசாங்கம் ஈழ அகதிகள் விவகாரத்தில் கடும்போக்கை கடைப்பிடித்து வந்திருக்கிறது.
இதனால் கெவின் ரூட்டிற்கு அவுஸ்திரேலிய மக்களிடையேயான செல்வாக்குக் குறைய நேர்ந்தது. அத்துடன் எதிர்க்கட்சிகள் ரூட்டின் இக்கடும்போக்கை கடுமையாக விமர்சித்து வந்தன. சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களும் அவரைக் கடுமையாக சாடியிருந்தன. இதன் காரணமாகவே தொழிற்கட்சி புதிய பிரதமரை தெரிவுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
கெவின் ரூட்டின் அறிவுறுத்தல்களுக்கு அமைய ஈழ அகதிகளுக்கு விசா வழங்குகின்றமைக்கான முன்னெடுப்புக்கள மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றிருக்கும் ஜூலியா கில்லார்ட் இக்கடும்போக்கை தளர்த்துவார் என்று ஆஸியில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் புதிய பிரதமரிடம் இருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளியாகி உள்ளன. இவர் பிரதமராகப் பதவியேற்று சில மணித்தியாலங்களில் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் அகதிகள் விவகாரத்தில் அவுஸ்திரேலியாவின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’