வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 ஜூன், 2010

மடி கணினி (லப்டப்) என செங்கட்டி: இலங்கை வர்த்தகரை ஏமாற்றிய சென்னை வியாபாரி

மடி கணினி (லப்டப்) வழங்குவதாக 15 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு செங்கட்டி வைத்துள்ள பொதியை இலங்கை வர்த்தகருக்கு கொடுத்து ஏமாற்றிய குற்றச்சாட்டுகளுக்காக சென்னை விமான நிலையப் பொலிஸார் தமிழநாடு, மண்ணடியைச் சேர்ந்த வர்த்தகரொருவரை கைது செய்துள்ளனர்.



இச்சம்பவம் பற்றி தெரியவந்துள்ளதாவது:-

மொஹமட் ஹசன்,மொஹமட் றபீ, மொஹமட் பௌஸி ஆகியோர் கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர்களாகும்.அவர்கள் புடவை மற்றும் பாதணிகள் வியாபாரத்திற்காக அடிக்கடி சென்னைக்கு வந்து செல்வது வழக்கமாகும்.
கடந்த வியாழக்கிழமை அவர்கள் சென்னைக்கு வந்து, வெள்ளிக்கிழமை அவர்கள் திரும்பிச் செல்லவிருந்தனர். அவர்கள் மண்ணடியிலுள்ள மொஹமட் ஷாபீர் என்ற வர்த்தகருடன் தொடர்பு கொண்டனர்.
குறைந்த விலையிலான லப்டப் கணினிகளை தன்னால் வழங்க முடியுமெனவும், அதனை இலங்கையில் அதிக விலையில் விற்கலாம் என்றும் ஷாபீர் ஹசனுக்கு கூறியுள்ளார். ஹசனிடமிருந்து பின்னர் ஷாபீர் 15 ஆயிரம் ரூபாவைப் பெற்றுள்ளார்.
ஹசன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவருடைய பொதி சோதனையிடப்பட்டது. அதற்குள் சந்தேகமான பொருள் இருந்தது அவதானிக்கப்பட்டது. சோதனையில் கணினிப் பை பொதிக்குள் வெறும் செங்கட்டியொன்று இருந்துள்ளது.
தான் செங்கட்டியைக் கொண்டு செல்வது குறித்து ஹசன் அறிந்திருக்கவில்லையென்று பொலிஸார் இந்து பத்திரிகை நிருபருக்குக் கூறியுள்ளனர். பொதிக்குள் இருந்தது லப்டப் என அவர் கருதியிருந்தார்.
கடந்த இரு நாட்களாக விசாரணை இடம்பெற்றபோது மண்ணடி வியாபாரி இலங்கை வர்த்தகரை ஏமாற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாபீர் சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.3 இலங்கை வர்த்தகர்களும் விடுவிக்கப்பட்டு வீடு செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளனர்.
ஷாபீர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் பாடசாலையை விட்டு விலகிய பின் இலங்கையில் பல வருடம் இருந்து விட்டு பின்னர் சென்னையிலுள்ள மண்ணடிக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், அவருக்கு பல மொழிகள் தெரியும் எனவும் பொலிஸார் கூறினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’