வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டுக்கான வாக்காளர்களை மீளாய்வு செய்யும் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்களை கிராம அலுவலர்களுக்கு வழங்க முடியாமல் போயுள்ளமையே இந்த தாமதத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் இந்த வாக்காளர் இடாப்புக்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதமானது சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாக பிரதேச புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் வாக்காளர் இடாப்புக்களை மீளாய்வு செய்யும் பணிகள் கிராம அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 2009ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்கள் இன்று வரையில் வன்னி தேர்தல் மாவட்டத்துக்குட்பட்ட வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து கருத்து தெரிவித்த வன்னி மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலர் ஒருவர், காகிதாதிகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாகவே வாக்காளர் இடாப்புக்களை உரிய நேரத்தில் தயாரித்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
இருப்பினும் மேற்படி வாக்காளர் இடாப்புக்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதமானது சந்தேகத்தை உருவாக்கியுள்ளதாக பிரதேச புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’