சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க அறிவிக்கக் கோரி இன்று தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்களின் தமிழ் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும் எனும் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு, உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அ.இ.அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மற்றும் மாணவர் அணியின் சார்பில் சென்னை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதிமுக அழைப்பு விடுத்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, ம.தி.மு.க. ஆகிய கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை எழுப்பி கோஷங்கள் ஆர்டபாட்டத்தில் முழக்கப்பட்டன. இது தொடர்டபான கோரிக்கை மணு ஒன்றும் அதிமுக தலைமைப்பீடத்தால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’