தற்போதைய சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணி சூளுரைத்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, ஜனநாயக தேசிய முன்னணி தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைக் கூறினார்.எதிர்த்தரப்பிலுள்ள ஏனைய அரசியல் கட்சிகளின் உதவியுடன் இது நிறைவேறும் எனவும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். //மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையிலான தூதுக்குழுவொன்று வன்னிகான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளது.
நாளை 14ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்த விஜயத்தின் போது வவுனியாவிலுள்ள இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகள் குறித்தும் கண்டறியப்படவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்கா தெரிவித்தார்.
மூன்று நாட்களாக அமையவுள்ள இந்த விஜயத்தின் போது யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’