உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இறுதி நாள் இன்று ஆகும்.
இன்றைய நிகழ்விற்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார்.
தமிழக முதல்வர் மு.கருணாநிதி சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியதற்காக "கனியன் பூங்குன்றனார்' எனும் பரிசு வழங்கவிருப்பதுடன், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மற்றும் தமிழ் இணைய மாநாடு ஆகியவற்றின் நிறைவுப் பேருரையையும் நிகழ்த்தவுள்ளார்.
அத்துடன், செம்மொழி மாநாட்டுக்கான தனி அலுவலர் கா.அலாவுதீன் நன்றியுரையாற்றவுள்ளார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் கடந்த 23ஆம் திகதி தமிழ்த்தாய் வாழ்த்துடன் கோலாகலமாக ஆரம்பமாகி தொடர்ந்து 5 தினங்கள் நடைபெறுகிறது.
இதன் ஆரம்ப நிகழ்வில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான சிறப்பு மலரை தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்டு வைத்திருந்தார்.
மேற்படி மாநாட்டில், இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்ட்டீல், தமிழக முத்ல்வர் மு.கருணாநிதி, தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, இலங்கைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.
மேலும் இதன் ஆரம்ப நிகழிவில் "இனியவை நாற்பது' என்ற தலைப்பில் தமிழர் இலக்கியம், கலை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’