வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 ஜூன், 2010

இந்தியாவுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்துமாறு ஐ.தே.க கோரிக்கை .//நாட்டுக்கு எது தேவை என்பது அரசுக்குத் தெரியவில்லை :

 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இந்திய விஜயத்தின் போது 7 இற்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எனவே இவ் ஒப்பந்தங்கள் தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்துமாறு ஐக்கியத் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க இக்கருத்தினை முன்வைத்தார்..//நாட்டுக்கு எது அவசரத் தேவை என்பது ஜனாதிபதிக்கோ அரசாங்கத்துக்கோ தெரியவில்லை என்று ஐக்கியத் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. 
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க இக்கருத்தினை முன்வைத்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"அரசாங்கம் 17ஆவது திருத்தச் சட்டத்தை செயற்படுத்தாமல் பின்நிற்கின்றது. 
நாட்டில் 17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் பல தடவைகள் அரசாங்கத்திடம் கோரியிருக்கிறோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மேலும் நீடித்தல், தேர்தல் முறையை மாற்றியமைத்தல் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடுவதாக அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் நாட்டுக்கு எது அவசரத் தேவை என்பது ஜனாதிபதிக்கோ அரசாங்கத்துக்கோ தெரியவில்லை" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’