வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 3 ஜூன், 2010

கல்கிசை நீதிமன்றில் விசித்திரமான வழக்கு விசாரணை!

ஆறறிவு படைத்த மனிதர்களின் விசாரணைகளை மட்டுமே பார்த்திருந்த எமக்கு விசித்திரமான வழக்கு ஒன்றை இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
வளர்ப்பு நாய் ஒன்று தொடர்பான வழக்கு விசாரணையே அது.

தனது செல்லப்பிராணி லம்ராடோர்(Labrador ) வகையைச் சேர்ந்த நாய் தொலைந்தமை தொடர்பாக ஒருவர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதவான் ருசிர வெலிவத்த முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, அன்டன் விக்ரமசிங்க, சுரேஸ் பெரேரா ஆகிய இரு மனுதாரர்கள் லம்ராடோர்(Labrador ) வகையை சேர்ந்த நாய் ஒன்றுக்கு உரிமை கோரியிருந்தனர்.
விசாரணை முடிவில் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விசித்திரமான ஒரு வழக்கு விசாரணையைக் காணக் கிடைத்ததே என்ற நினைப்பில் நாமும் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’