சென்ற வாரம் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. முன்னாள் புலி இயக்க உறுப்பினர்களான ஐம்பத்திமூன்று சோடிகளுக் குத் திருமணம் நிறைவேற்றி வைக்கப்பட்டமை ஒரு நிகழ்வு. இவர்கள் புலி இயக்கத்தில் போராளிகளாக இருந்த காலத்திலேயே ஒருவரையொருவர் விரும்பிய வர்கள். இராணுவத்தில் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இவர்களுக்கு ஒரே நாளில் அரசாங்க செலவில் திருமணம் நிறைவேற்றி வைக்கப்பட்டது. பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் குருநகர் வரையிலான படகு சேவை ஆரம்பிக்கப்பட்டமை மற்றைய நிகழ்வு.
திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐம்பத்திமூன்று சோடிகளும் ஒரு வருடத்துக்கு முந்திய காலம் வரை அரச படையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள். அரச படையினரைப் பரம எதிரிகளாகவே கருதியவர்கள். அரச படையினரும் இவ்வாறே. இப் போராளிகளைத் தங்கள் எதிரிகளாகவே கருதிச் செயற்பட்டார்கள். இப்போது இவர்கள் நண்பர்கள்.
திருமண வைபவத்துக்கான சகல ஏற்பாடுகளையும் படையினரே செய்தார்கள். சிலரது திருமணப் பதிவில் இராணுவ அதிகாரிகள் சாட்சிகளாகக் கையொப்பம் இட்டுள்ளனர்.
முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளித்த சம்பவங்கள் பற்றி முன்னரும் நாம் குறிப்பிட்டிருக்கின்றோம். சிறுவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதையும் முன்னாள் பெண் போராளிகளுக்கு ஆடைத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுத்ததையும் உதாரணமாகக் கூறலாம்.
பூநகரியிலிருந்து குருநகர் வரையிலான படகு சேவை வட பகுதி மக்களைப் பொறுத்த வரையில் மிகவும் முக் கியத்துவம் வாய்ந்தது. தரைவழியாக இரண்டரை மணித் தியாலம் எடுக்கும் பயணத்தை இப்படகு சேவையின் மூலம் நாற்பத்தைந்து நிமிடத்தில் முடிக்கலாம். இப் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் பிரயாணம் செய்வது முற்றாகத் தடை செய்யப் பட்டிருந்தது. பூநகரிக்கூடாக யாழ்ப்பாணத்துக்குப் பிரயாணம் செய்வதை அந்த நாட்களில் நினைத்துப் பார்க்கவும் முடியாது.
யுத்தத்துக்குப் பிந்திய காலத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் நம்பிக்கையூட்டுவனவாக இருப்பதற்கு இவை சிறந்த உதாரணங்கள். வடக்கும் தெற்கும் முற்று முழுதாகத் துண் டிக்கப்பட்டிருந்த நிலையில் இரு பகுதி மக்க ளுக்கிடையிலான உறவும் சீர்குலைந்திருந்தது.
இப்போது இடம்பெற்று வரும் மாற்றங்கள் வடக்கையும் தெற்கையும் பெளதீக ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் இணைப்பதற்கு உதவுகின்ற அதேவேளை இருள் சூழ்ந்திருந்த வட பகுதி மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவனவாகவும் உள்ளன. வடக்கின் பல பகுதிகளில் இடம்பெறுகின்ற அபி விருத்திச் செயற்பாடுகள் இதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன.
தமிழ் மக்களின் அரசியல் இனப் பிரச்சினையுடனும் அத னுடன் சம்பந்தப்பட்ட விடயங்களோடும் மட்டுப் படுத்தப்பட்டிருந்த நிலையே நீண்டகாலமாக நிலவியது. அபிவிருத்தியைப் பற்றியும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகள் பற்றியும் அன்றைய அரசியல் தலைமைகள் அதிகம் சிந்திக்கவில்லை.
அபிவிருத்தியும் அரசியல் தீர்வுக்கான முயற்சியும் ஒன்றுக் காக மற்றதைப் பின்தள்ள முடியாதவை என்பதோடு ஒன்றுக்கு மற்றது உந்துசக்தியாகவும் அமைபவை என்ற கருத்து நிலைக்கு அமைவாகச் செயற்படுவதற்கு வாய்ப் பான சூழ்நிலை இப்போது உருவாகியிருக்கின்றது. அர சியல் தலைவர்கள் இந்த வாய்ப்பைச் சரியான முறையில் பயன் படுத்துவதிலேயே நாட்டின் முன்னேற்றமும் மக் களின் நிம்மதியும் தங்கியுள்ளன.
தினகரன் தலையங்கம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’