ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அரசாங்கம் சாதகமான பதிலை அளிக்க வேண்டுமென தேசிய சமாதானப் பேரவையின் தலைமைப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் ஒன்றியத்தின் கோரிக்கைகளை உதாசீனம் செய்துவிடக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்குச் சாதகமான முறையில் பதிலளிப்பதனால் நாட்டுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதுடன், சர்வதேச ரீதியிலான நன்மதிப்பும் உயர்வடையும்.
ஒன்றியத்தின் நிபந்தனைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகவே காணப்படுகிறது.
ஏதேனும் நிபந்தனைகள் நாட்டின் இறைமையை பாதிக்கக் கூடிய வகையில் அமைந்திருந்தால் அது குறித்து பகிரங்கமாகப் பேசி இணக்கப்பாட்டை எட்ட முடியும். நிபந்தனைகளை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிப்பதன் மூலம் இரண்டு பிரதான நன்மைகள் நாட்டுக்குக் கிட்ட வாய்ப்பு உண்டு.
நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் நாட்டின் நல்லாட்சி குறித்த இலங்கை அரசாங்கத்தின் அக்கறையை வலுப்படுத்த முடியும். பொருளாதாரத்திலும் அநேக சலுகைகளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பேற்படும்" என்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’