தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த, இலங்கையுடன் இணைந்து செயல்படவிருப்பதாக மலேசிய நாட்டின் பொலிஸ் மா அதிபர் மூசா ஹசன், சீனாவின் சின் ஹுவா இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் மலேசியாவில் பதுங்கி இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து தாம் கவலை அடைவதாக அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.எனினும் இந்த தகவல் வெளியானதில் இருந்து, எந்த ஒரு போராட்டக்குழுவின் உறுப்பினர்களும் மலேசியாவில் இதுவரையில் அவதானிக்கப்படவில்லை எனவும், மலேசிய பொலிஸார் தொடர்ந்தும் இது தொடர்பில் அவதானத்துடன் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள், மலேசியாவில் இருந்து தமது இயக்கத்தை இயக்க முயற்சிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மலேசியாவில் இயங்குகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களும், தனி நிறுவனங்களும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய அவர், அவற்றுக்கான ஆதாரங்கள் எவையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மலேசிய மக்கள் எந்த ஒரு போராட்ட குழுவினராலும் இலக்கு வைக்கப்படவோ, மலேசியாவை தமது பயிற்சி பெறும் தளமாக பயன்படுத்தவோ இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மலேசிய பொலிஸார் சிறப்பாக செயற்பட்ட பல போராட்ட இயக்கங்களின் உறுப்பினர்களை கைது செய்துள்ளமையை சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் தெற்காசிய நாடுகளுடன் தகவல் பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அங்கு பல முஸ்லிம் போராட்டக்குழுக்களின் தலைவர்களும் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது, தொடர்ந்தும் பொலிஸாஅவதானதுடன் இருப்பதாகவும், எனினும் உள்நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் எவையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் மலேசியாவின் நகர் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மருந்து பொருட்கள், போராட்டக் குழுக்களுடையதாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்ட போதிலும், அதனை அவர் நிராகரித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’