வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 19 ஜூன், 2010

மணமேடையில் இருந்து காதலனுடன் வெளியேறிய மணமகள்-எதிர்வீட்டு பெண்ணுடன் மணமகன் திருமணம்

விழுப்புரம்: மணமகன் தாலி கட்டும் போது அதை தட்டிவிட்டு விட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண் . தனது காதலருடன் வெளியேறினார். இதனால் மணமகன் தனது எதிர் வீட்டு பெண்ணுக்கு தாலி கட்டினார்.
சினிமாவில் வருவது போன்ற இந்த பரபரப்பான சம்பவம்  பற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் உத்திராபதி (27). இவருக்கும் அவருடைய மாமா சின்னதுரையின் மகள் சுதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நேற்று தியாகதுருகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.
காலை 7.15 மணியளவில் அய்யர் மந்திரம் ஓதி தாலியை எடுத்து உத்திராபதி கையில் கொடுத்தார். அதை சுதாவின் கழுத்தில் கட்ட முயன்றபோது, அதை மணமகள் சுதா தட்டிவிட்டார். கழுத்தில் அணிந்திருந்த மாலையையும் கழற்றி வீசினார்.
மணமேடையில் இருந்து எழுந்து நின்ற சுதா, எனக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை, திருமணத்துக்கு வந்திருக்கும் அத்தை மகன் பாக்கியராஜை நான் காதலிக்கிறேன், அவரையே திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

இதனால் மண்டபத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அதிர்ந்தனர்.
அவரை சமாதானம் செய்ய பெற்றோர் முயன்றனர். ஆனால் பாக்கியராஜையே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிய சுதா, அவருடன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுதாவின் இந்த முடிவால் அதிர்ந்து போன மாப்பிள்ளை உத்திராபதிக்கு அதே மேடையில் திருமணம் செய்ய அவரது பெற்றோரும், உறவினர்களும் முடிவு செய்தனர்.
திருமணத்துக்கு வந்திருந்த மணமகனின் எதிர் வீட்டைச் சேர்ந்த நிர்மலாவின் பெற்றோரிடம் தங்கள் மகனுக்கு பெண் தருமாறு உத்திராபதியின் பெற்றோர் பெண் கேட்டனர்.
நிர்மலாவின் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்கவே, நிர்மலா அவசர அவசரமாக திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
வேகவேகமாக அவருக்கு அலங்காரம் நடந்தது. நிர்மலாவுக்கு உத்திராபதி தாலி கட்டினார்.
சினிமா மாதிரி நடந்த இந்த சம்பவத்தால் அந்தப் பகுதி முழுவதுமே பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’