வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 ஜூன், 2010

யுத்தத்தில் கைவிடப்பட்ட விவசாய வாகனங்களை கையளிக்க நடவடிக்கை

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொதுமக்களினால் கைவிடப்பட்ட விவசாயத்திற்குரிய வாகனங்களை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சற்று முன்னர் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார்.


இந்நிலையில், குறித்த வாகனங்களை பொது இடத்தில் வைத்து அங்கிருந்தே பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக வன்னி மாவட்ட இணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த நடவடிக்கையானது எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களினால் பெருமளவிலான விவசாயத்திற்குரிய வாகனங்கள் கைவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், மேற்படி விவசாயத்திற்குரிய வாகனங்களை உரியவர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் மேற்படி கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இது தவிர, இவ்வாறு முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களினால் கைவிடப்பட ஏனைய வாகனங்களையும் உரியவர்களிடம் கையளிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடியதாகவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’