.சிறுகூடல் பட்டியில் சாத்தப்பன் விசாலாட்சி தம்பதிகள் தமிழுக்கு தந்த தமிழ் முத்தையா அவன் முத்தையா. பின்னர் காரை முத்துப் புலவர் வணங்காமுடி கமகப்பிரியா பார்வதிநாதன் ஆரோக்கியசாமியாய் எங்கள் மனங்களில் வலம்வந்த ஏக காவியம் பாடி கண்ணதாசனாகி கவியரசனாகி எங்கள் கவின்சன் இசைத்தட்டில் மட்டுமல்ல எங்கள் மனத்தட்டிலும் மங்கா இடம்பிடித்த மன்னன் அவனுக்கு இன்று அகவை 83 ஆண்டவனிடம் ஒரு கருணை மனு!அவன் ஆத்மா சாந்தி அடைய
"இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா ?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா ?
(இதய)
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா ?
(இதய)
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா ?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா ?
விளக்கைக் குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா ?
வீட்டுக்குயிலைக் கூட்டில் வைத்தால்
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா ?
விளக்கைக் குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா ?
வீட்டுக்குயிலைக் கூட்டில் வைத்தால்
பாட்டு பாடுமா.. ?
பாட்டு பாடுமா... ?(இதய)
மனதை வைத்த இறைவன்
அதில் நினைவை வைத்தானே - சில
மனிதர்களை அறிந்து கொள்ளும்
அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் - மேனி
அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை
அடிமை செய்தானே..
அடிமை செய்தானே...
(இதய)
உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது ?
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது ?
பழுது பட்ட கோவிலிலே தெய்வமேது ?
பனி படர்ந்த பாதையிலே பயணமேது ?
(இதய)"
படம் : இருவர் உள்ளம் - வருடம் 1963
குரல் : திருமதி பி. சுசீலா
பாடல் : கவியரசர் கண்ணதாசன்
இசை : திரு.கே.வி.மஹாதேவன்
நடிகை : திருமதி. சரோஜாதேவி
இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா ?
என்று ஒரு பெண்ணின் மன சோகத்தை அழுத்தமாகச்
சொல்லத் துவங்கிய கவியரசர் -
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் எப்படித்
தோன்றும் என்றும், வீட்டுக்குயிலைக் கூட்டில் வைத்தால்
எப்படிப் பாட்டுப் பாடும் என்றும் கேட்டு எழுதியது
இப்பாடலின் சிறப்பு!
அதோடு,
உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது? -
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது? -
பழுது பட்ட கோவிலிலே தெய்வமேது?-
பனி படர்ந்த பாதையிலே பயணமேது?-
என்று அடுக்கடுக்காய்ப் பெண்ணின் சோகத்தைச்
சிறந்த உவமைகளுடன் முத்தாய்ப்பாய் எழுதியதுதான்
இந்தப் பாடல் அமரத்துவம் பெறக் காரணமாகவும்
அமைந்தது என்றால் அது மிகையல்ல!
----------------------------
மற்றுமொரு பாடல்:
பெண்:
"கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன்
முன்னே பாடல் இசைத்தார்... பாடல் இசைத்தார்
ஆண்:
கண்ணிருந்தும் ஓவியத்தைக்
காட்டி மறைத்தார்
இரு காதிருந்தும் பாதியிலே
பாட்டை முடித்தார்
பாட்டை முடித்தார்
பெண்:
ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு
தடையை விதித்தார்
ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு
தடையை விதித்தார்
சாய்ந்து விட்ட மரத்தினிலே
கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின்
சிறகை ஒடித்தார்
ஆண்::
பண்ணறிந்து மீட்டுமுன்னே
யாழைப் பறித்தார்
யாழைப் பறித்தார்
பெண்:
கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
ராஜா: கண்ணிருந்தும் ஓவியத்தைக்
காட்டி மறைத்தார்...காட்டி மறைத்தார்
பெண்:
பெண் பெருமை பேசிப் பேசிக்
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால்
பெண்ணை அழிப்பார்
பெண் பெருமை பேசிப் பேசிக்
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால்
பெண்ணை அழிப்பார்
ஆண்:
முன்னுமில்லை பின்னுமில்லை முடிவுமில்லையே
மூடன் செய்த விதிகளுக்கு தெளிவுமில்லையே
பெண்:
கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன்
முன்னே பாடல் இசைத்தார்
கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன்
முன்னே பாடல் இசைத்தார்... பாடல் இசைத்தார்"
திரைப் படம்: ஆடிப் பெருக்கு - வருடம் 1962
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
இசை: திரு. ஏ.எம்.ராஜா
பாடியவர்கள்: திரு. ஏ.எம்.ராஜா - திரு.பி..சுசீலா
நடிகர்கள்: திரு.ஜெமினி - திருமதி. சரோஜா தேவி
இந்தப் பாடலுக்கு விளக்கம் தேவையில்லை.
கவியரசரே அற்புதமாக விளக்கத்துடன் எழுதியுள்ளார்
காதலி கேட்க - அதற்குக் காதலன் விளக்கம்
சொல்ல - ஒரு உணர்வு, மற்றும் சொற் போராட்டமே
நடந்திருக்கின்றது
முத்தாய்ப்பான வரிகள் எவை என்கிறீர்களா?
கொடுக்காமல் விடுவேனா?
கீழே கொடுத்துள்ளேன்
"முன்னுமில்லை பின்னுமில்லை முடிவுமில்லையே
மூடன் செய்த விதிகளுக்கு தெளிவுமில்லையே"
சிறுகூடல்பட்டிக்கு மேலும் பெருமை சேர்த்துவிட்டது!
மதிப்பிற்குறிய கவிஞர் சக்திதாசன் அவர்கள் அளித்த வாழ்த்துப்பா!
சிறுகூடல்பட்டி தந்த
சிந்தனைச் செல்வனே !
சிறியதாயொரு கிராமமல்ல
சிறுகூடல்பட்டி
சிறப்புமிகு தலமே !
கவிபாடும் உலகில் குயில்
தந்த
காவியத்திரு ஊராம் கேளீர் !
தமிழன்னை புகழ்சொல்லும்
தலைமகனென்று மனம் துள்ளும்
கற்றவர் சபையும்
கண்தூக்கிப்பார்க்கும்
கவியரசன் என்னெஞ்சத்து
தேரிருக்கும்
கண்ணதாசனைத் தந்தவொரு
மண்ணன்றோ
கரம்கூப்பி வணங்கிடுவேன்
அவ்வூரை
அழகுமிகு பட்டுச்சேலைக்கு
கரைவைத்துப்
அலங்காரம் செய்கையில்
மிளிரும் சேலைபோல்
சுவையான தமிழிற்கு எம்
கவிஞன் தந்த
சுந்தரஎழில் கண்டு துள்ளாத
தமிழனும் உண்டோ?
தமிழர் நெஞ்சங்களில்
வரைபடமாய்
தங்கியிருக்கும்
சிறுகூடல்பட்டியே
மனமிறைந்து கவியரசன்
வணங்கும்
மலயரசித்தாயின் அருள்
மிகுஊராம்
தமிழ் வாழ்க, கவியரசன்
புகழ் வாழ்க
தங்கமகனையீன்ற
சிறுகூடல்பட்டி வாழ்க!
சக்தி
சக்திதாசன்
கவிஞர் சக்திதாசன் அவர்களுக்கு நன்றி மிகவும்
2 கருத்துகள்:
// சிறுகூடல் பட்டியில் சாத்தப்பன் விசாலாட்சி தம்பதி பெற்றெடுத்த தமிழ் முத்தையா அவன் முத்தையா. பின்னர் கண்ணதாசனாகி கவியரசனாகி, இன்னும் தமிழ் மனங்களில் நிறைந்து நிற்கும் அம்மார்க்கண்டேயனுக்கு இன்று 83 வது பிறந்த தினம்.//
நண்பரே ! இது எனது வலைப்பூவில் நான் வெளியிட்ட வசனங்கள் http://sarhoon.blogspot.com/2010/06/blog-post_24.html தயவு செய்து வெட்டி ஒட்டுவதை நிறுத்திவிட்டு சுயமாக எழுத முயலுங்கள். ( இதனை நீங்கள் பிரசுரிக்கமாட்டீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன். தயவு செய்து திருத்திக்கொள்ளுங்கள் )
நண்பா கண்ணதாசன் பிறந்தது எந்த இடம் என்பது நீங்கள ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கு வேண்டும் என்றால் வரலாறு தரவா நண்பா ? இதோ. தமிழ் நீங்கள்தான் முதலில் கண்டுபிடித்த மாதிரி எழுத வேண்டாம் நண்பா பிறப்பு முத்தையா
ஜூன் 24 1927
சிறுகூடல்பட்டி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு அக்டோபர் 17 1981 (அகவை 54)
சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
புனைப்பெயர் காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
தொழில் கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர், இலக்கிய ஆசிரியர்
நாடு இந்தியர்
இனம் தமிழர்
நாட்டுரிமை இந்தியர்
எழுதிய காலம் 1944-1981
குறிப்பிடத்தக்க
விருது(கள்) சிறந்த வசனத்திற்கான தேசிய விருது
1961 குழந்தைக்காக
சாகித்திய அகதமி விருது
1980 சேரமான் காதலி
துணைவர்(கள்) பொன்னழகி
பார்வதி
ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர் பிள்ளைகள் 13 . திருந்தாத தேகம் இருந்தென்ன லாபம் இது போதுமா? இன்னும் வேண்டுமா?
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’