வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 ஜூன், 2010

கடனட்டை மோசடி இலங்கைப் பிரஜை ஒருவருக்கு பிரிட்டனில் நாலரை வருடக் கடூழிய சிறைத் தண்டனை!

பிரித்தானியாவில் போலியான கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பெருந்தொகை மில்லியன் பவுண்ட் நிதி மோசடிகளில் தேசிய ரீதியில் ஈடுபட்டு வந்த இலங்கைப் பிரஜை ஒருவருக்கு பிரிட்டன் நீதிமன்றம் நாலரை வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

ரீ.டீ.மொன்ட்போர்ட் (வயது 26) என்பவரே தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர் ஆவார். இவர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்டார். தண்டனைக் காலம் முடிவடைந்தவுடன் இவர் நாடு கடத்தப்படுவார். இவரின் உடைமையில் இருந்து 35000 கடன் அட்டைகள் மீட்கப்பட்டிருந்தன.
இவர் கைது செய்யப்பட்டமையைத் தொடர்ந்து இவ்வாறான நிதி மோசடிகளில் பெரிதும் குறைந்து விட்டன என்று பொலிஸார் மன்றுக்குத் தெரிவித்தார்கள். இவர் 2001 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்திருந்தார். இதே வழக்கில் இவருடைய சகாக்கள் மூவரை நீதிமன்றம் குற்றவாளியாகக் கண்டு தலா மூன்றரை வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’