வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 ஜூன், 2010

இனி தயாரிப்பை கைவிடும் இயக்குனர் ஷங்கர்..!

பிரமாண்டமும், பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டும் - இதுதான் ஷங்கரின் முத்திரை. இது இயக்கத்தில். தயாரிப்பு என்று வரும்போது சிக்கனமே அவரது அடையாளம்.
சின்ன பட்ஜெட், புதிய இயக்குநர், பரிசோதனை முயற்சி. இதுவே தயாரிப்பாளர் ஷங்கரின் வியூகம். இந்த அணுகுமுறைக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. பாலாஜி இயக்கத்தில் வந்த காதலும் சிம்பு தேவன் இயக்கிய இம்சை அரசனும் பரவலானப் பாராட்டைப் பெற்றதுடன் வசூலையும் அள்ளின.



இந்த இரு படங்களும் தந்த தெம்பில் அடுத்தடுத்துப் பல படங்களைத் தொடங்கினார் தயாரிப்பாளர் ஷங்கர். ஆனால் கல்லூரி, அறை எண் 305இல் கடவுள், ரெட்டைச் சுழி என்று அடுத்தடுத்துப் படங்கள் ஃப்ளாப் ஆயின. இந்தியாவிலேயே அதிகச் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ஒருவரான (ரூ 10 கோடி வாங்குவதாகப் பேச்சு). ஷங்கர், டைரக்‌ஷனில் ஈட்டியதைத் தயாரிப்பில் இழக்க ஆரம்பித்தார். இதையடுத்து அவர் இனி தயாரிப்பு முயற்சியில் இறங்கமாட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம். அப்படியே தயாரிப்பில் இறங்கினாலும் படம் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் தனது நேரடிக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஷங்கரின் தயாரிப்பில் நாகா இயக்கும் ஆனந்தபுரத்து வீடு வெற்றி பெற்றால் இந்த முடிவு மாறுமா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’