வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 ஜூன், 2010

மீள்குடியேறுவோருக்கு அமெரிக்கா 2.25 மில். டொலர் நிதி உதவி

வடக்கில் இடம்பெயர்ந்து தமது சொந்த இடங்களில், கிராமங்களில் குடியமர்ந்த மக்கள் நலன்கருதி அமெரிக்கா 2.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் இந்நிதியை சுமார் 9,000 குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி மக்களுக்குத் தலா 25,000 ரூபா {220 அமெரிக்க டொலர்) வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிதியைக் கொண்டு அவர்கள் சைக்கிள்களைக் கொள்வனவு செய்யவோ, ஏனைய போக்குவரத்து தேவைகளுக்காகவோ, சமூக மீளமைப்புக்காகவோ செலவிட முடியும்.
சில குடும்பங்கள் தங்களது காணிகளைத் துப்புரவு செய்து, விவசாயத்தை மேற்கொள்ளவும் சிறு வர்த்தகங்களை ஆரம்பிக்கவும் திட்டமிடலாம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஸ்தாபனம் வழியாக, ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், 50,400 குடும்பங்களுக்கு, கடந்த 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல், மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 33 மில்லியன் அமெ. டொலர்களை வழங்கியுள்ளது.
நேற்று இலங்கை வந்துள்ள, அமெரிக்கத் திணைக்கள, பொதுஜன மற்றும் அகதிகளுக்கான பதில் இணைப்புச் செயலாளர் கெல்லி க்ளெமண்ஸ், எதிர்காலத்தில் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் மீள்குடியேறியோருக்கு உதவி வழங்கும் என்பதை உறுதிபடுத்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ___

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’