வட மாகாணத்தின் உள்ளூராட்சி சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 200 மில்லியன் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இந் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நூறு வீத மக்களின் பூரண பங்களிப்புக்களின் மூலமே இத் திட்டம் அமுல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேவைப்படும் வசதிகள் நடவடிக்கை உடனடியாக செய்து கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு உள்ளூர் சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் இந் நிதியை வழங்கவுள்ளது. இத்திட்டத்திற்கு உலக வங்கி கடன் உதவி வழங்கவுள்ளது என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’