வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 14 ஜூன், 2010

புகலிடக் கோரிக்கை முன்வைத்து தாய்லாந்துக்கு சென்ற 15 தமிழர்கள் நாடு திரும்ப விருப்பம்

தாய்லாந்தில் புகலிடக் கோரிக்கை முன்வைத்து காத்திருந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் சிலர் ஏற்கனவே கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புகலிடக் கோரிக்கை முன்வைத்து தாய்லாந்துக்கு சென்ற 15 தமிழர்களைக் கொண்ட குழுவே இவ்வாறு நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளது.போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து தாய்லாந்திற்குள் பிரவேசித்த காரணத்தினால் இந்த தமிழ் அகதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் நோக்கில் போலியான பயண ஆவணங்களை தயாரித்து தப்பிச் செல்வதே இந்தத் தமிழர்களின் பிரதான இலக்காகக் காணப்பட்டதெனத் தெரிவிக்கப்படுகிறது.போலியான ஆவணங்களை தயாரித்து ஐரோப்பா செல்ல முற்பட்ட குறித்த இலங்கைத் தமிழர்களுக்கு தாய்லாந்து அதிகாரிகள் இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தாகவும், ஓராண்டு தண்டனை முடிந்ததன் பின்னர் நாடு திரும்ப இவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’