இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு மீன்பிடிப் படகில் செல்ல முயன்ற ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 12 அகதிகள் இந்தோனேசியக் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
திலீப்குமார் லக்ஷ்மன், பகீரதன் ஆகியோரே உயிரிழந்த இலங்கைத் தமிழர்கள் ஆவர். ஏனைய 10 அகதிகளும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஆவர்.அவுஸ்திரேலிய அரசாங்கம் இச்சம்பவம் குறித்து இந்தோனிசிய அரசிடம் விளக்கம் கோரியுள்ளது. ஆனால் இந்தோனேசிய அரசு இச்சம்பவம் குறித்து எதுவுமே தெரியாது என்று அறிவித்துள்ளது.
உயிரிழந்த இலங்கைத் தமிழர்கள் இருவரும் கடந்த வருடமும் இந்தோனேசியாவில் இருந்து அவுஸ்திரேலியா செல்வதற்கு இப்படியான ஒரு படகுப் பயணத்தை மேற்கொண்டிருந்ததாகவும், எனினும் அச்சமயம் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’