வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 ஜூன், 2010

ஆ‌ந்‌திரா‌வி‌ல் கொ‌‌த்தடிமைகளாக இரு‌க்கு‌ம் 1000 த‌மிழ‌ர்க‌ள்

ஆ‌ந்‌‌திரா‌வி‌ல் த‌மிழக‌த்தை சே‌ர்‌ந்த 1000 பே‌ர் கொ‌த்தடிமைகளாக ‌சி‌க்‌கி‌க் கொ‌ண்டு‌ள்ளதாக த‌ப்‌பி வ‌ந்தவ‌ர்க‌ள் அ‌தி‌ர்‌‌ச்‌சி தகவ‌ல் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளன‌ர்.
ஆ‌ந்‌திர மா‌நில‌ம் ‌‌சி‌த்தூ‌ரி‌ல் இய‌ங்‌கி வரு‌ம் மா‌ம்பல‌ம் ‌‌ஜூ‌ஸ் தயா‌ரி‌க்கு‌ம் நிறுவன‌ம் ஒ‌ன்‌றி‌ல் வேலை பா‌ர்‌ப்பத‌ற்காக ‌தி‌ண்டு‌க்க‌ல் மாவ‌ட்ட‌ம் ந‌த்த‌ம் தாலுகா‌வை சே‌ர்‌ந்த 40 பே‌ர் செ‌ன்று‌ள்ளன‌ர்.
அ‌திக ச‌ம்பள‌ம், த‌ங்கு‌‌மிட‌ம் அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று வ‌h‌க்குறு‌தி அ‌ளி‌‌‌த்து மதுரையை சே‌ர்‌ந்த 3 பே‌ர் இ‌வ‌ர்களை ‌சி‌த்தூரு‌க்கு அனு‌ப்‌பி வை‌த்து‌ள்ளன‌ர்.
ஆனா‌ல் ஒருவேளை உணவு‌ம், 20 ம‌ணி நேர உழை‌ப்பு‌ம் என கொ‌த்தடிமைகளாக அவ‌ர்க‌ள் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இதை‌த் தொட‌ர்‌ந்து அ‌ங்‌கிரு‌ந்து த‌ப்‌பிய 19 பே‌ர் வேலூ‌ர் வரை நடந்து வ‌ந்து உ‌யி‌ர் ‌பிழை‌த்து‌ள்ளன‌ர்.
ஏற‌த்தாழ த‌மிழக‌த்தை சே‌ர்‌ந்த 1000 பே‌ர் கொ‌த்தடிமைகளாக அ‌ந்த ‌நிறுவன‌த்த‌p‌ல் ‌சி‌க்‌கி‌க் கொ‌ண்டு‌ள்ளதாகவு‌ம் த‌ப்‌பி வ‌ந்தவ‌ர்க‌ள் அ‌தி‌ர்‌‌ச்‌சி தகவ‌ல் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளன‌ர்.
கொ‌த்தடிமைக‌ள் த‌ப்‌பி வ‌ந்தது கு‌றி‌த்து தகவ‌ல் அ‌றி‌‌ந்த ‌திருவ‌ண்ணாமலை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் ராஜே‌ந்‌‌திர‌ன் அவ‌‌ர்க‌ள் பாதுகா‌ப்பாக சொ‌ந்த ஊ‌ர் செ‌ல்வத‌ற்கான ஏ‌ற்பாடுகளை மே‌ற்கொ‌ண்டா‌ர்.
கொ‌‌த்தடிமைகளாக உ‌ள்ள த‌மிழ‌ர்களை ‌‌மீ‌ட்க உ‌ரிய நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ஆ‌ட்‌சிய‌ர் உறு‌திய‌‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’