வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 12 மே, 2010

உணவில் விஷம் கலந்து கொடுத்து தன்னைக் கொல்லச் சதி : நளினி புகார்


ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் இருந்து வரும், நளினி, உணவில் விஷம் கலந்து தன்னைக் கொல்ல சதி முயற்சி நடப்பதாக புகார் கூறியுள்ளார்.
ஏப்ரல் 28 மற்றும் 30 தேதிகளில், சிறைத்துறை ஐஜிக்கு நளினி இரண்டு புகார் கடிதங்களை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதங்கள் நளினி வழக்கறிஞர் புகழேந்தி மூலம் வெளிவந்துள்ளது.
அந்தக் கடிதங்களில் நளினி குறிப்பிட்டுள்ளதாவது:-
முதல் வகுப்பு கைதிகளுக்கு, தனக்கு உதவியாக ஒரு கைதியை வைத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், நளினிக்கு சிறையில் பிரச்சினை தொடங்கியதிலிருந்து இந்த வசதி மறுக்கப்பட்டுள்ளது. நளினி இருக்கும், சிறைத் தொகுதியை வழக்கமாக சுத்தம் செய்யும், யாரும் சுத்தம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
தன்னுடைய அறையில், சோதனை என்ற பெயரில், அடிக்கடி சிறைக் கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையில் சோதனை என்று செய்து வருவதாகவும், அவ்வாறு கடந்த 20.04.2010 அன்று சோதனை செய்த போது, சிறைக் கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, உதவி ஜெயிலர் கே.சி.லட்சுமி மற்றும் சீப் வார்டர் ஆகியோர் வந்திருந்தனர்.
அப்போது, சிறைக் கண்காணிப்பாளர் ராஜலட்சுமி உத்தரவிட்டபடி சீப் வார்டர் நளினியின் கையை பின்னால் பிடித்துக் கொண்டதாகவும் அப்போது உதவி ஜெயிலர் கே.சி.லட்சுமி ஷு காலால் உதைத்தனர் என்றும் கூறியுள்ளார் நளினி.
மேலும், தனது உணவில் சிறைக் காவலர்கள் மூலமாக மருந்து கலக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்து என்றும் அந்தப் புகார்களில் தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தை வெளியிட்டுள்ள புகழேந்தி கூறியதாவது,
நளினியை அவர் சந்தித்த போது, வழக்கமாக காலை 5 முதல் 5.30 மணிக்கு எழுந்து விடுவதுதான் அவர் வழக்கம் என்றும், சமீப காலமாக காலை 8.30 மணிக்கு கூட தன்னால் எழுந்திருக்க முடியாமல் மயக்கமாக இருக்கிறது என்றும், உடல் உபாதைகளுக்காக எவ்வித மருந்துகளும் எடுத்துக் கொள்ளாத நிலையில், திடீரென்று, காலையில் இவ்வாறு மயக்கம் ஏற்படுவது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் நளினி தெரிவித்ததாக கூறுகிறார்.
ஏப்ரல் முதல் வாரத்திலேயே, தன்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யுமாறு, நளினி மனு கொடுத்திருந்த நிலையிலும், சிறைக்குள், சிறை நிர்வாகத்தின் துணையுடன், கஞ்சா, புகையிலை போன்ற பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் கொடுத்திருக்கும் சூழலிலும், அது பற்றியெல்லாம் எவ்வித விசாரணையும் நடக்காத சிறை நிர்வாகம், தனக்கு எதிராக இவ்வாறான சதிகளில் ஈடுபடுவதாக நளினி தெரிவித்ததாக புகழேந்தி கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’