வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 26 மே, 2010

நாட்டைப் புனரமைக்கப் புலம்பெயர் தமிழர் உதவ வேண்டும் : பீரிஸ்

நாட்டின் புனர்நிர்மாண செயற்பாடுகளுக்குதவ புலம் பெயர் தமிழர்களும் முன்வரவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர், நியூயோர்க்கில் பி. பி. சி. சேவைக்கு அளித்த பேட்டியின் போதே இவ்வாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

"இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களைத் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தி வருகிறது.
அத்துடன் வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் மீள் நிர்மாணிக்கப்பட்டும் வருகின்றன. இந்தச் செயற்பாடுகளில் உலகளாவிய ரீதியில் புலம் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.
அரசாங்கம் ஆரம்பித்துள்ள நடவடிக்கைகளுக்கு ஓர் உந்து சக்தி தேவை. புலம் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்கள் இவ்விடயத்தில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.
எனவே வடக்கு கிழக்கு மக்களுடன் உலகளாவிய ரீதியில் புலம் பெயர்ந்துள்ள இலங்கைத் தமிழர்களும் இதில் பங்கு கொள்ள வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் சில பிரதேசங்களைக் கட்டியெழுப்ப பொருளாதார மறுமலர்ச்சி தேவைப் படுகிறது" என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’