வடக்கு  மாகாண சபைக்கு விரைவில்  தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது. அத னைத் தொடர்ந்து வடக்கின் உள்ளூராட் சிச் சபைகளின் தேர்தல்கள் இடம்பெறும்.
இவ்வாறு கூறினார்
 பொருளாதார அபி விருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ. 
கிளிநொச்சிக்கு நேற்றுமுன்தினம் வெள் ளிக்கிழமை விஜயம் செய்த பஸில் ராஜ பக்ஷ படையினர் மத்தியில் பேசுகையில் இப்படிக் கூறியுள்ளார்.
வடக்கின் நிர்வாகத்தை பொதுமக்களி டம் கையளிக்க வசதியாக தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. யுத்தத்தில் இருந்து மீண்ட மக்கள், ஜனநாயக வழியில் தம்மை வழிநடத்தக் கூடியவர்களைத் தெரிவுசெய்ய  வசதியாகவே தேர்தல்கள் நடத்தப்பட விருக்கின்றன. 
நீண்டகாலத்தின் பின் வடக்கின் நிர் வாகத்தை மக்கள் பிரதிநிதிகளிடம் கைய ளிக்கும் நோக்குடன் வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படவிருகிறது. 
இத்தேர்தலைத் தொடர்ந்து வடக்கில் உள்ள உள்ளூராட்சிச் சபைகளுக்கு தேர் தல்கள் நடத்தப்பட்டு அவற்றின் நிர்வா கங்களும் பொதுமக்களிடம் கையளிக்கப் படும் என்றார்  அமைச்சர்.
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’