வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 28 மே, 2010

அரசமைப்புச் சபை மீண்டும் இரண்டு மாதங்களில் செயற்படும் அதற்கான ஏற்பாடுகள் ஆரம்பம் என்கிறார் பிரதமர்

நீண்டகாலமாக செயலிழந்து கிடக்கும் அரசமைப்புச் சபை இன்னும் இரண்டு மாதங்களில் மீண்டும் செயற்படும் என்று பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்துக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தைத் தொடர்ந்து இச்சபையை அமைப்பதற்கான நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறுகின்றார்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறி யவை வருமாறு:
நல்லாட்சியை அமைப்பதில் எமது அரசு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற் பட்டு வருகிறது. நாம் என்றும் ஊழல், மோசடிகளுக்கு எதிராகவே போராடி வரு கிறோம். எமது ஆட்சியில் ஊழல், மோச டிகள் எவையுமில்லை.
யுத்தத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த எமது அரசு ஊழல், மோசடிகளை யும் முற்றாக இல்லாதொழிக்கப் பாடு பட்டு வருகிறது. அந்த அடிப்படையிலேயே அரசமைப்புச் சபையை மீண்
டும் ஸ்தாபிப்பதில் அக்கறை காட்டப்படு கிறது.
அரசமைப்புச் சபை செயலிழந்துள்ள மையால் அதன்கீழ் வரும் பல ஆணைக்குழுக்களும் செயலிழந்துள்ளன. இந்த அரசமைப்புச் சபையையும், ஆணைக்குழுக்களையும் மீண்டும் ஸ்தாபிப்பதன் மூலம் நல்லதோர் ஆட்சியை உருவாக்க முடியும் என்று நாம் நம்புகிறோம்.
இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அரசமைப்புச் சபை மீள ஸ்தாபிக்கப்படும். அதனைத் தொடர்ந்து அதன்கீழ் வரும் லஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, நீதித்துறை ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு போன்றவற்றிற்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அவ்வாணைக்குழுக்கள் செயல்வடிவம் பெறும்.
நாடாளுமன்றில் ஜூன் மாதம் ஆரம்பமாகும் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் ஜூலையில் நிறைவுபெறும். அதனைத் தொடர்ந்து அரசமைப்புச் சபைகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’