வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 மே, 2010

இலங்கைத் தமிழ் மக்களுக்கான விடுதலை இன்னும் கிடைக்கவில்லை - ரணில் சென்னையில் தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கான விடுதலை இது வரை கிடைக்கவில்லை. அவர்கள் அடி நிலை யில் வாழும் நிலையே நீடிக்கின்றது. தேர்த லில் தமிழ் மக்களின் வாக்குகள் வேண்டும் என்றே புறக்கணிக்கப்பட்டு விட்டது என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற் கொண்டு தென்னிந்தியாவுக்குச் சென்ற ரணில், சென்னை விமான நிலையத்தில் வைத்து இதனைக் கூறியதாக ஜி.ரி.என். செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது, இலங்கை அரசாங்கம் பெற்றது உண் மையான வெற்றியல்ல. இதற்குத் தேர்தலில் மக்களின் வாக்குச் சதவீதம் சாட்சி.
தற்போது அமைந்துள்ள ராஜபக்­ அரசு கல்வி, பொருளாதாரம், தேசிய ஒருமைப் பாடு ஆகியவற்றில் மிகப் பெரிய சவால்க ளைச் சந்திக்க வேண்டியுள்ளது. நடந்த தேர்தலில் நூற்றுக்கு 75 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை. சுமார் 2.6 சத வீத தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுவிட்டது.
இது உண்மையான வெற்றியில்லை. அரசியல் இயந்திரம் முற்றிலும் செயற்படாமல் முடங்கியுள்ளது. தமிழ் மக்களுக்கான விடுதலை இதுவரை கிடைக்கவில்லை எனக் கூறியுள்ள ரணில், அடிநிலையிலேயே வாழும் நிலை நீடிப் பதாகக் கூறினார். தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கு வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்ட தாக அவர் குற்றஞ்சாட்டினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’