குடாநாட்டில் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டும் பொருட்டு, இதுவரையும் நிகழ்ந்த சட்டவிரோதச் செயல்கள் யாவும் களையப் படும் என்று பாதுகாப்பு அமைச் சின் செய லாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவித் துள்ளார்.
இதன்மூலம் சகல சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கும் முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம். இதை உணர்ந்து சகல தரப்பினரும் செயற்பட வேண்டும்.
யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இ.த. விக் னராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ். மேல்நீதிமன்றத்தில் நேற்று இடம்
பெற்ற உயர்மட்ட மாநாட்டில் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேல்நீதிமன்ற நீதிபதி மாநாட்டில் மேலும் தெரிவித்தவை வருமாறு :
கடந்த 30 வருடங்களின் பின்னர் குடா நாட்டு மண்ணில் சட்டமும் ஒழுங்கும் வெகுவாகச் சீர்குலைந்துள்ளன; ஜன நாயக விழுமியங்கள் செயலிழந்துள்ளன. எவரும் அச்சமோ பயமோ இன்றி தமது நிலையை எடுத்துக்கூறும் நிலைமை இன்று இந்த மன்றில் உருவாகியுள்ளது.
ஏனெனில், கடந்த 30 வருடங்களில் 13 வருடம் சேவையாற்றியதன் பேரில் இன்றுதான் சட்டத்தரணிகளின் ஆதங்கத் தையும் நீதிவான்களின் ஆதங்கத்தையும் கேட்க முடிகிறது. சட்டத்தின் பிரகாரம், நீதிமன்றம் ஏன் விரைவாகச் செயற்பட வில்லை என்று சுதந்திரமாக வலியுறுத் தும் சூழலைக் காண்கிறேன்.
இச்சூழலை உருவாக்கியவர்களின் ஆதங்கத்தை மறுக்கமுடியாது. எனவே எம்முன் உள்ள விடயம், நீதிவானுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல, ஜனநாயகக் காற்று வீசிய காலத்தில் இடம் பெற்ற கடத்தல், காணாமற்போதல் உட் பட்ட பல்வேறு சட்டமுரணான செயற் பாடுகளுக்குப் பதில் கிடைக்க வேண்டும் என்பதே பலரின் ஆதங்கமாக இருக்கிறது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு
சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண் டிய பொறுப்பு பொலிஸாருக்கே உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இந்தவகையான நிகழ்வுகளை வேரோடு பிடுங்க கோத்தபாய ராஜபக்ஷ திட்டமிட் டுள்ளார். சட்டம், ஒழுங்குக்குப் பொறுப் பான பொலிஸாரை உள்வாங்கியுள்ள பாது காப்பு அமைச்சின் செயலாளர், மிகவிரை வில் சட்டவிரோத நடவடிக்கைகள் யாவும் களையப்படும் என்று என்னிடம் உறுதி கூறியுள்ளார். அதைச் சகலதரப்பினருக் கும் தெரியப்படுத்தும்படி என்னிடம் கேட் டுள்ளார்.
அதேவேளை குடாநாட்டில் பணிபுரி யும் பொலிஸாருக்கும் அறிவுரை ஒன்றைக் கூறவிரும்புகிறேன்.
சட்டத்தின் தேவைக்கு ஏற்ப பணி புரிய வேண்டும். மேலதிகாரிகள் விடுக் கும் உத்தரவுக்குப் பணிந்து, கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும். பாது காப்பை உறுதிசெய்ய விடுக்கும் பணிப்பு ரைகளை உதாசீனம் செய்யக் கூடாது. இன்று சட்டத்தரணிகள் பொலிஸாரின் செயற்பாட்டை மிகவும் விமர்சித்தார்கள்.
உரிய நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்
எதிர்காலத்தில் மேலதிகாரிகள் விடுக் கும் பணிப்புரைகளை மதித்துச் செயற்ப டாத பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகும்.
சட்டத்தை, ஒழுங்கைப் பேண நீதிமன் றங்களும் சட்டத்தரணிகளும் சட்டத்தின் பிரகாரம், நீதிவானுக்கு ஏற்பட்டுள்ள அச்சு றுத்தல் தொடர்பான விரைவான விசார ணைக்குப் பூரண ஒத்துழைப்புத் தருவார் கள். எதிர்காலத்தில் இத்தகைய கூட்டங் களைக் கூட்டவேண்டிய தேவை எழாது எனக்கருதுகிறேன்.
சட்டத்தரணிகளுக்கும் கணிசமான பங்கு உண்டு
சட்டத்தரணிகளில் ஒருசாரார் இன்று சமுகமளிக்கவில்லை. தனிப்பட்ட கார ணங்களால் சமுகமளிக்கவில்லை என அறிவித்துள்ளனர்.
சட்டத்தரணிகளுக்கு ஒரு விடயத் தைக் கூறவிரும்புகிறேன். சட்டமும் ஒழுங் கும் நிலைநாட்டப்படும் விடயத்தில் சட் டத்தரணி களின் பங்கும் கணிசமான அளவு உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
குடாநாட்டில் ஜனநாயகக் காற்றைப் பூரணமாகச் சுவாசிக்க ஏதுவாக, சட்டம், ஒழுங்கைப் பேண பாதுகாப்பு அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகளுக்குச் சட்டத்தர ணிகள் பகிஷ்கரிப்பை கைவிட்டுப் பூரண ஆதரவை வழங்கவேண்டும்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நீதிமன் றத்தின் ஓர் அங்கமான சட்டத்தரணி களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை அவர்கள் உணரவேண்டும் என்றார் மேல்நீதி மன்ற நீதிபதி.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’