வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வுக்காக வருகை தரவுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக் கொள்வார் என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற முதலாவது அமர்வின் போது சரத் பொன்சேகாவை ஊடகவியலாளர்கள் சந்திக்க அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. அத்துடன் அவருடைய உரையை சில ஊடகங்கள் இருட்டடிப்பும் செய்திருந்தன. இப்போது அவருக்கு கிடைத்திருக்கும் பாராளுமன்ற சிறப்புரிமைகளின் பிரகாரம் அவர் ஊடகவியலாளர்கள் மாநாட்டை நடத்துவார் என்றும் விஜிதN‘ரத் தெரிவித்தார். மேலும் வருகின்ற பாராளுமன்ற அமர்வில் எதிரணியின் பிரதான பேச்சாளரான சரத் பொன்சேகா உரையாற்றவுள்ளார். இப்பேச்சின் போது நாட்டிலுள்ள மனிதஉரிமைகள் துஷ்பிரயோகம் குறித்து அவர் பேசவுள்ளார் என நம்பப்படுகிறது. மனித உரிமைகள் மீறல் பிரச்சினையால் பொன்சேகா தனிப்பட்ட முறையிலும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக விஜித குறிப்பிட்டுள்ளார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’