தினந்தோறும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் உலகின் ஏனைய பாகங்களில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் பல்வேறு காரணங்களினால் இவ்வாறு உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர் உயிரிழப்பது தொடர்பான சம்பவங்கள் நாள்தோறும் பதிவாவதாக குறிப்பிடப்படுகிறது. உயிரிழப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் எனவும் அநேகமானவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாக கடமையாற்றியவர்கள் எனவும் சுட்டிக் காட்டப்படுகிறது. இவ்வாறு உயிரிழப்போரது உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதில் அதிகாரிகள் கூடுதல் முனைப்பு காட்டுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய வருமானத்தில் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் காத்திரமான பங்களிப்பினை நல்கி வருகின்றமையும் குறிப்பிடதக்கது. மாதந்தோறும் வெளிநாட்டில் பணிபுரிந்து உயிரிழப்போர் தொடர்பான 40சம்பவங்கள் பதிவாவதாக வெளிவிவகார அமைச்சின் தூதுவராலயப் பிரிவு பொறுப்பதிகாரி சோமதாச விஜேசுந்தர தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் நான்கு மாதத்தில் மட்டும் 150 இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’