வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 5 மே, 2010

யாழ்பாணத்தில் இந்திய விசா நிலையம் திறந்து வைப்பு _

இந்திய விசா விண்ணப்ப நிலையம் ஒன்றை இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைத்தார். கொழும்பில், கடந்த 2008 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் முதல் விசா விண்ணப்ப நிலையத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் VFS குளோபல் நிறுவனமே இதனை நடத்தும்.

இந்த அலுவலகம் யாழ். பிறவுண் வீதியிலுள்ள 89ஆம் இலக்கக் கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
அங்கு உரையாற்றிய இந்தியத் தூதுவர்,
யாழ்பாணத்தில் ஆரம்பிக்கப்படும் இந்த நிலையமானது இப்பிரதேசத்தில் வாழும் மக்கள், விசா பெற்று அடிக்கடி இந்தியா செல்வதை ஊக்கபப்டுத்தும். இது பாரம்பரியமாக யாழ்ப்பாண மக்களுக்கும் இந்திய மக்களுக்குமிடையேயான நெருங்கிய பிணைப்பை வளர்ச்சியுறச் செய்யும்.
அத்துடன் எதிர்காலத்தில் துணைத் தூதரகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் திறப்பதற்கு இந்தியா எதிர்பார்க்கின்றது" என்றார்.
தலைமன்னாருக்கும் தூத்துக்குடிக்குமிடயேயான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கும் இந்தியா இணங்கியுள்ளது.
திங்கள் தொடக்கம் வெள்ளி வரை தனது சேவையை இந்நிலையம் வழங்கும். இந்திய விசா அனுமதி பத்திரம் தொடர்பான கோரிக்கைகளை www.vfs-in-lk என்ற இணையத் தளத்தினூடகவும் info.inlk@vfshelpline.com என்ற மின்னஞ்சல் முகவரியுடனூடகவும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களை 011 4505588 என்ற தொலைபேசி இலக்கத்தூடகப் பெற்றுக் கொள்ள முடியும் என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’