பிரிட்டனில் நடந்த நேரடி தொலைக்காட்சி விவாதத்தின்போது பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், வாக்காளர்களை ஈர்க்கத் தவறி விட்டதாக விவாதத்திற்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு கூறியது. முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் டேவிட் கெமரான் இந்த விவாதத்தில் முதல் இடத்தை தட்டிச் சென்றார்.
அவர் தன் வாதங்களை சரளமாக எடுத்து வைத்த விதம் மக்களைக் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது. குடிநுழைவு மற்றும் பொருளியல் குறித்த தனது முக்கியக் கொள்கைகளை அவர் திறம்பட விளக்கினார்.பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மூன்று முக்கியக் கட்சிகளின் பிரதான வேட்பாளர்கள் வியாழனன்று இரண்டாவது நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் மோதிக்கொண்டனர். இந்த விவாதத்தில் லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவர் நிக் கிளக் இரண்டாவது இடத்தில் வந்தார். தொழிற்கட்சித் தலைவரான பிரதமர் கார்டன் பிரவுன், தனது பொருளியல் சீர்திருத்தக் கொள்கைகளை திறம்பட எடுத்துரைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’